ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு.

அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு.

நூருல் ஹுதா உமர்

அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி மற்றும் “டயகோனியா” அமைப்புக்களின் அனுசரணையில் கல்முனை கமு /கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறையில் இன்று
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணியின் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கில் அம்பாரை மாவட்டதில் உள்ள கணிசமான அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கின் வளவாளராக பாத்திமா உயர்கல்வி நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் கலாநிதி றஊப் செயின் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார். தனது விரிவுரையில் குழந்தை வளர்ப்பு, மாணவர்களின் உளவியல், கல்வி மேம்பாடு, வகுப்பறை உளவியல் உட்பட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top