யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் பலி.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
பாடசாலை அருகே உணவுப் பொருள் விற்பனை எனும் பெயரில் போதை வியாபாரிகள் .
பாடசாலை அருகே ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் போதைப்பொருளும் விற்பனை.! மாணவர்களிடையே பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட், மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 11…
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டம் .
ஏறாவூரில் வீதி விபத்துக்களை தடுக்கும் விஷேட வேலைத்திட்டம் . அண்மைக்காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டம் ஒன்று இன்று திங்கள்கிழமைமீராகேணி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SA.சமந்த சிறிவர்தன,இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் லெப்டினன் கேனல் DM.அனஸ் அஹமட்,ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி JSA.ஜெயலத்,மாக்கான் மாக்கார் பாடசாலை அதிபர்.VT.ஜனூன்,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான TM.உமர் அறபாத்…
இலங்கை மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு.
ஏமாறாதீர்கள்; 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு. இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் “2000” என்ற இலக்கம் தெளிவாகத் தெரியும். பணத்தாளின் முன்பக்கமும் பின்பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றிணைந்து முழுமையான படமாகக் காட்சியளிக்கும். பணத்தாளைச்…
இன்று அதிகாலை ஹபரணையில் விபத்து .
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹபரணையில் ஏற்பட்ட விபத்தில் ஏறாவூர் நகரசபை கௌரவ உறுப்பினர் அல்ஹாபிழ் உவைஸ்,ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சக்கூர் அவர்களும் அவரது மனைவி மற்றும் அம்புலன்ஸ் சாரதி அஸீம் அவர்களும் விபத்தில் சிக்கி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாழைச்சேனை அக்ரம்.
ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாழைச்சேனை முஹம்மது அக்ரம் இன்று அதிகாலை பயணமானார். இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணி புரிந்து வரும் வாழைச்சேனையைச்சேர்ந்த அப்துல் கபூர் முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொள்கின்றார். மத்திய ஆபிரிக்க குடியரசு செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலைப்படுத்தல் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து…
கோறளைப்பற்று மத்தி ஹிஜ்ரா நகரில் முதலாவது போதைப்பாவனையாளர் புனர்வாழ்வு நிலையம் திறந்து வைப்பு.
கோறளைப்பற்று மத்தி, ஹிஜ்ரா நகரில் முதலாவது போதைப்பாவனையாளர் புனர்வாழ்வு நிலையம் திறந்து வைப்பு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைய முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப்பாவனையாளர்களின் நன்மைகருதி இலங்கையில் தமிழ்மொழியிலான முதலாவதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் பிரிவில் ஹிஜ்ரா நகரில் 19.01.2026ம் திகதி திங்கள்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…
கபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் .
குருநாகல் மாவட்டத்தின் “ஜனனி” வேலைத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செயலமர்வானது கடந்த 10ம் ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில், குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பொது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் CaFFE (Campaign for Free and Fair Elections) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கீன் அவர்கள் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார். மேலும் PeFFRELL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்களும், IRES…
ஜனாதிபதி பங்கேற்ற மாகாண தைப்பொங்கல் விழா.
யாழ். வேலணையில் ஜனாதிபதி பங்கேற்ற மாகாண தைப்பொங்கல் விழா: பாரம்பரிய முறைப்படி வரவேற்புவடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பொங்கல் விழா இன்று காலை யாழ்ப்பாணம், வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தமிழர்களின் பாரம்பரிய கலாசார முறைப்படி மாலை அணிவிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டார்….
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தினார்.
பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர் நோய் நிலைமைகளால் வைத்தியசாலையில் குறுகிய காலம் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கௌரவமிக்க ஊடகவியலாளராக கருதப்படும் அவர் புலனாய்வு ஊடகவியலாளராக தனது தொழிற் துறை வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அத்துடன் பாதுகாப்பு சார்ந்த புலனாய்வாளராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு, அரச நிர்வாகம், அரசியல் அதிகாரம் மற்றும் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் பிரதான விடயங்கள் அவரது ஊடக…
