மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம்.

. மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இக் கூட்டம் இடம்பெற்றது. மாவட்டத்தில் இயங்கும் தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களின் தலைவர்களை உள்ளடக்கி இயற்கை வளங்களை…

Read More

மறைந்த இளைஞனின் இல்லத்திற்குச்சென்று அனுதாபம் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் எம்பி .

நேற்று முன்தினம் (29) காலமான அமரர் க.டெலக்சன் அவர்களின் மரண வீட்டுக்குச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விஜயம் செய்து, அன்னாரின் குடும்பத்தினரை நேற்று (31) சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்தார். இதன்போது, அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுடன் துயரத்தைப்பகிர்ந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர்களின் இழப்பிற்கு தனது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார். அத்துடன், இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையையும் பொறுமையையும் வழங்க பிரார்த்தித்தார். அமரர் க.டெலக்சன் அவர்கள் சிறு வயதிலேயே தனது…

Read More

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார நிகழ்வு.

மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு சக்ஸஷ் முன்பள்ளியால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்குபற்றிய முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (30.07.2026) வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் இடம்பெற்றன. முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சர்ஜுன்,…

Read More

வவுனியாவில் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை (Northern Zonal Record Room) நேற்று (30.07.2026) காலை 08.30 மணிக்கு வவுனியா மாவட்டம் A 9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள்…

Read More

UNDP மற்றும் Search for Common Ground அமைப்புகளின் ஆதரவுடன் “பிரஜைகள் பட்டய” திரைநீக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

UNDP மற்றும் Search for Common Ground அமைப்புகளின் ஆதரவுடன், ஏறாவூர் சமூக மட்ட அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “பிரஜைகள் பட்டய” திரைநீக்க விழா இன்று . காலை சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் ஊடாக, ஏறாவூர் நகரசபையினால் வழங்கப்படும் சேவைகள், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள், அதேபோன்று பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரச நிறுவனங்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து,…

Read More

தேசிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு.

தேசிய போதைப் பொருள் தடுப்பு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு  வியாழக்கிழமை (23/07)அன்று காலை மிச்நகர் கிராம சேவகர் பிரிவில் பரகா ஜும்ஆ பள்ளிவாயலில் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் MYA.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் உதவி பிரதேச செயலாளர் ULM.அஸ்லம் கலந்து கொண்டிருந்தார். வளவாளர்களாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வஸீம்,ஏறாவூர் ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் MWF.யுஸ்றா,போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ELM.இர்ஷாத்,மத்தியஸ்தசபையின்…

Read More

பொலன்றுருவை, ஜெயந்திபுரத்தில் ரூ. 29.5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தபால் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

. உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மனித வளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு தபால் சேவை இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ. பொலன்றுவை மாவட்டத்தின் ஜயந்திபுர மக்களுக்கு மிகவும் திறமையான, முறையான மற்றும் மக்கள்-நட்பு தபால் சேவையை வழங்கும் நோக்கத்தில், அனைத்து நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட ஜயந்திபுர புதிய தபால் அலுவலகக் கட்டிடம், சுகாதார…

Read More

புகைப்படப்பிடிப்பு ஆற்றல் மூலம் வரலாற்றை தத்ரூபமாக பதிவு செய்தவர் எஸ்.எம்.சுரேந்திரன்.

சிரேஷ்ட புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்களின் மறைவு தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. வீரகேசரி பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளராக சுமார் நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக பணியாற்றிய அவர், சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் திருகோணமலையில் இன்று (26.07.2026) காலமான செய்தியை அறிந்து நாம் ஆழ்ந்த துயருறுகிறோம். தனது புகைப்படக் கருவி ஊடாக வரலாற்றின் முக்கிய பக்கங்களை தத்ரூபமாக பதிவு செய்த அவர், இன வன்முறைகள், போர்க் கால…

Read More

புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு.

இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (2026 ஜூலை 17) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் தலைமையகத்திற்கு வந்தடைந்த கடற்படைத் தளபதியை, பொலிஸ் மா அதிபர்.ஜெனரல் பிரியந்த வீரசூரிய, புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, நாட்டில் சட்டம்…

Read More

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் பணி முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கட்டிடத்தை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை ஏறாவூர் நகரசபையினால்  நேற்று வியாழக்கிழமை(16/07)  நகரசபையின்  தவிசாளர்  எம்.எஸ். நழீம்  தலைமையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி மற்றும் ஒட்டமாவடி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கு வருகை தரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அலுவலகத்தை எளிதில் அடையாளம் கண்டு சென்றடையும் வகையில், புன்னக்குடா வீதியின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் …

Read More
Back To Top