மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் பணி முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கட்டிடத்தை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை ஏறாவூர் நகரசபையினால்  நேற்று வியாழக்கிழமை(16/07)  நகரசபையின்  தவிசாளர்  எம்.எஸ். நழீம்  தலைமையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி மற்றும் ஒட்டமாவடி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கு வருகை தரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அலுவலகத்தை எளிதில் அடையாளம் கண்டு சென்றடையும் வகையில், புன்னக்குடா வீதியின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில்  அடைடையாளப் பெயர்ப் பலகை நிறுவப்பட்டது .

இந்நிகழ்வில் நகரசபையின்  தவிசாளர் எம்.எஸ். நழீம் ,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்,ஊரின் முக்கியஸ்தர்கள்  என பலர் கலந்து கொண்டு, இப்பணியை ஆரம்பித்து வைத்தனர்.

பொதுமக்களின் வசதியையும், அரச சேவைகளை எளிதில் அணுகும் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top