35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)அன்றுஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய…

Read More

ஏறாவூர் கிரிக்கெட் லீக் இன்று ஆரம்பமானது.

Eravur_Cricket_League_2026. தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பம்ஆற்றங்கரை மைதானத்தில் உற்சாகமான உத்தியோகபூர்வ தொடக்கம். ஏறாவூரின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் Eravur Cricket League – 2026 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆற்றங்கரை மைதானத்தில் கோலாகலமான உத்தியோகபூர்வ வைபவத்துடன் ஆரம்பமானது. ஏறாவூர் கிரிக்கெட் லீக்கின் தலைவரான எம். பௌசர் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…

Read More

கல்குடா பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்..

கல்குடா பிரீமியர் லீக் பருவகால கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக ஆரம்பம் கல்குடா பிராந்தியத்தின் விளையாட்டுத்துறையில் மிக முக்கியமான நிகழ்வாகக்கருதப்படும் “கல்குடா பிரீமியர் லீக் – 2026” (KPL Season-09) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழா நேற்று 25.04.2026ம் திகதி சனிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி பொதுமைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் (NSSC) தலைவர் ZM.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

காத்தான்குடியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பு தொடர்பில் விஜயம்.

நவீன உள்ளக விளையாட்டரங்கு : ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்பி ஆய்வு காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின்…

Read More

சம்மாந்துறை நீச்சல் தடாக சீரமைப்பு பணிகள் விரைவில்.

நீச்சலை ஊக்குவிக்க வாய்ப்பு நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம் : விரைவில் சீரமைப்புப்பணிகள் ஆரம்பம் (நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை விளையாட்டுத்தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை…

Read More

தேசிய  ஷோடோகான் கராத்தே போட்டியில் நிந்தவூர் அணி வெற்றி.

தேசிய ஷோடோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற Team Bruce (SKMS) வீரர்கள் கடந்த 04.04.2026ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற “15வது Shotokan Karate National Championship 2025” போட்டியில் நிந்தவூர் Team Bruce மாணவர்கள் சாதனை படைத்து 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். தேசிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இத்தேசியளவிலான போட்டியில் SKMS அமைப்பின் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இது ஒழுக்கம்,…

Read More

ஜாஹிர் ஜே.பி.வெற்றிக்கிண்ணம் மாளிகா பிங்க் அணி வசமானது.

ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண இறுதியாட்டம் : மாளிகா பிங்க் அணி சம்பியன் (நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், பிரதேச சமூக சேவகருமான ஏ.எம். ஜாஹீரின் பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதியாட்டத்தில் மாளிகா பிங்க் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது. மாளிகா விளையாட்டுக்கழகத்தின் நான்காவது ஆண்டை முன்னிட்டு கழகத் தலைவர் எஸ். பஸ்லூன் தலைமையில் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய…

Read More

126 கிமீ வேகத்தில் பந்து வீசி பாராட்டுக்களை பெற்றுள்ளார் லதுசன்.

126 கிமீ வேகத்தில் பந்து வீசி இலங்கை அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கவையே மிரள வைத்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  அழகையா லதுசன். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய பழைய மாணவனும் சிவானந்தியன் விளையாட்டுக்கழக வீரருமான 22 வயதுடைய அழகையா லதுர்சன் கிறிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தலைமையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற திறமை தேடல் முகாமில் மணிக்கு 126 கிமீ வேகத்தில் பந்து வீசி மலிங்கவினதும் அங்கிருந்தவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். நேற்று (14)தேர்வில் பந்து…

Read More

மீண்டும் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது நிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி.

மீண்டும் வரலாற்றுச்சாதனை படைத்தநிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி. (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய 2026ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட கபடிப்போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டரங்கத்தில் கடந்த 07, 08, 09ம் திகதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 14, 16, 18 ஆகிய வயதுப்பிரிவு கபடி அணிகள் பங்கு கொண்டு மூன்று அணிகளுமே வெற்றிவாகைசூடி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்ட…

Read More

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் T20 வெற்றிக்கிண்ணம் தொடர்பாக கருத்து தெரிவிப்பு.

இந்திய அணியின் 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிகள் 50 ஓவர் உலகக் கோப்பைப் வெற்றிகளுக்கு  ஈடாகாது” என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி  தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும்,  சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும் பெருமை பெற்றுள்ளது . இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது…

Read More
Back To Top