எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
எதிர்வரும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட எல் நினோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், எல் நினோவின் செல்வாக்கும் அதன் தாக்கங்களை…
