நில சக்தி வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்.

“நில சக்தி” (பிம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2026

“நில சக்தி” (பிம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2026/06/02 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

“நில சக்தி” வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது 02.06.2026 திகதி புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் உதவி ஆணையாளர் செல்வி எஸ்.மோகனா அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ரீ.தரிந்த்ர ஜெயரத்ண (விசாரணை பிரிவு), மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட காணி உத்தியோகத்தர், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், பிரதேச செயலகங்களின் காணி உத்தியோகத்தர்கள், விடையத்துடன் தொடர்புடைய திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், தாம் எதிர்நோக்கும் காணி விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

“நில சக்தி” (பிம் சவிய) திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள காணி உரித்து பத்திரம் தொடர்பாக இதன் போது தெளிவூட்டப்பட்டதுடன், காணி உரித்து விசாரணைகள் மேற்கொள்வதில் அதிகாரிகளுக்கு காணப்படும் பிரச்சினைகள், அரச காணிகளை இனங்கண்டு கொள்வதில் காணப்படும் இடர்பாடுகள், அவற்றை இனங்கண்டு கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய விடையங்கள், உரிய நபர்களுக்கு உரிமைச் சான்ழிதழ் பத்திரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பணம் கொடுத்து பெற்றுக் கொண்ட காணிகளில் கூட பிரச்சனைகள் காணப்படுமிடத்து அவற்றிற்கான விசாரனைகள் மூலம் தீர்வினை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் இதன் போது காணி திணைக்களத்தின் அதிகாரிகளினாலும் மேலதிக மாவட்ட செயலாளரினாலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

அரசினால் முன்னெடுக்கப்படும் “நில சக்தி” (பிம் சவிய) திட்டமானது முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவிலும் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top