காத்தான்குடிக் கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு(CBG)”
இன்று(01)காலை காத்தான்குடி நகர சபையின் கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JPதலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ்,காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர் மௌலவி அஜ்வத்(பலாஹி)JP மற்றும் நகர சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செயலாளர் தனது உரையில்
வாரம் இரண்டு தடவை கடற்கரையை துப்புரவு செய்கின்ற நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், கடற்கரைச் சூழலை தூய்மையாக வைத்திருப்பது அனைவரது கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்.

நகர முதல்வர் தனது உரையில்
“கடற்கரைச் சூழலைப் பாதுகாக்குமாறும், வீசப்படுகின்ற கழிவுகள் குறிப்பாக பிளாஸ்டிக்,இறப்பர் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்கள் கடலிலே கலந்து கடல் வாழ் உயிரினங்கள் அதை உட்கொள்வதன் மூலம் இறப்பதாகவும் , அவ்வாறு உட்கொள்ளப்பட்ட மீன்களை நாங்கள் உண்ணுகின்ற போது புற்றுநோய் போன்ற பாரிய நோய்கள் ஏற்படுவதாகவும், கழிவுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாததன் காரணமாக ஓசோன் படலத்தில் துளைகள் விழுவதும் ,அடிக்கடி காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இவைகள் அமைவதாகவும் குறிப்பிட்டார்.”

அத்துடன் “இன்று முதல் காத்தான்குடி கடற்கரையில் குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை” மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீணான சிரமங்களில் இருந்து தவிர்ந்து
எமது கடற்கரைச் சூழலை நாம் பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்கும் உரிய முறையில் கையளிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top