

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.
‘நம்பியோ’ (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இது தெரியவந்துள்ளது.
