பெண்களுக்கு எதிரான பாலினம்சார்ந்த வன்முறை ஒழிப்புதிட்டத்திற்கு சஜித் ஆதரவு.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலினம் சார்ந்த வன்முறையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் உலகளாவிய 16 நாள் செயற்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை ஒட்டி, வன்முறைக்கு எதிரான செய்தியைக் குறிக்கும் விசேட பதக்கம் (பேட்ஜ்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தப் பதக்கத்தை அணிந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான உலகளாவிய வேலைத்திட்டத்திற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்தச் சர்வதேச முன்னெடுப்பின் அடையாள நிறமான செம்மஞ்சல் நிறத்தை ஊக்குவிக்கும் வகையில், இன்றைய தினம் செம்மஞ்சல் அல்லது அந்நிறத்தை ஒத்த ஆடைகளை அணிந்து ஆதரவு தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் இன்றைய தினம் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top