

வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் சிறப்பு குளிர்பானப்பந்தல்
வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜரூள் அவர்களின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.சஞ்ஜீவ அவர்களின் தலைமையில் வெசாக் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் குளிர்பான பந்தல் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குளிர்பானம் வினியோகிக்கப்பட்டது
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இந்நிகழ்வு செய்யப்பட்டிருந்துடன், பகலுணவும் வழங்கி வைக்கப்பட்டது.
சர்வமதத்தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அன்பு, கருணை, மனிதநேயத்தை வலியுறுத்திய வாழைச்சேனை பொலிஸாரின் இச்செயற்பாடு பொதுமக்களின் பெரும் வரவேற்பைப்பெற்றது.
இதன் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
