17வது தேசிய படையினர் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள தேசிய படையினர் நினைவிடத்திற்கு முன்பாக இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

தமக்காக அன்றி, நாட்டிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்ததுடன், அவர்களை நமது இலங்கை மண்ணில் பெற்றெடுத்த அன்பிற்குரிய பெற்றோர்களுக்கும், குடும்பங்களின் அனைத்து உறவினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சுதந்திரமான நாடும், அதேபோன்று அபிவிருத்தியடைந்த தேசமுமே அன்று உயிர்த்தியாகம் செய்து போரிட்ட அனைத்து படையினரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது என்று குறிப்பிட்டதுடன், அவர்கள் வேண்டிய அந்த அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் உறுதியளித்தார்.

தாம் அனுபவித்த அழிவுகளை வரலாற்றுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய யுகம் உதித்துள்ளது என்றும், அதற்காக நிலைபேறான அமைதி மற்றும் சகவாழ்வுக்கான பாலத்தை நாம் கட்டியெழுப்பி வருகிறோம் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், இந்த நாடு மீண்டும் எந்தவொரு இனவாத மற்றும் தீவிரவாதக் குழுக்களின் பலியாக மாறுவதற்கு இடமளிக்காமல், அமைதி நிறைந்த, சுதந்திரமான, ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top