கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம். (பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026ம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது, கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு சமூகப்பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன்,…

Read More

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் அங்கத்தவர்கள் துருக்கி பயணம்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) அங்கத்தவர்கள் ஒரு வார கால ஊடகப் பயிற்சி நெறிக்காக துருக்கி பயணம்.. துருக்கியின் அங்காராவில் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள ‘இலங்கை புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சித் திட்டத்தில்’ (Sri Lankan New Generation Journalism Training Program) பங்கேற்பதற்காக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) 10 உறுப்பினர்களைக் கொண்ட ஊடகவியலாளர் குழு ஞாயிற்றுக்கிழமை  (19)அதிகாலை துருக்கி நோக்கிப் புறப்பட்டது. துருக்கிய ஒத்துழைப்பு…

Read More

நாளை முதல் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளை தொடரவுள்ளன.

நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு. அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகிறது. முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. புத்தாண்டு விடுமுறையின்…

Read More

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வெள்ளி விழா.

வெள்ளி விழா கொண்டாடும் சமுர்த்தி வங்கி (பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக்கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) வங்கியில் இடம்பெற்றது. வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், வாடிக்கையாளர்களினால் சேமிப்பு வைப்புக்களும் வைக்கப்பட்டன. வங்கியின் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களினால் நேற்றைய தினம் ரூபா 3-5 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டது. சாய்ந்தமருது…

Read More

ஏறாவூர் பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஏறாவூர் பொதுச் சந்தை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.. ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், ஏறாவூர் பொதுச் சந்தை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை  (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகரசபை தவிசாளர்  எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேவேளை, கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா…

Read More

ஊடக அறிக்கையிடல் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் .

அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பில் கலந்துரையாடல். (எம்.ஐ.அப்துல் நஸாா்) காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பிலான விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 8 மணிக்கு அல் பஜர் பள்ளிவாயலில் நடைபெற்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் வளவாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம். பைறூஸ் கலந்து கொண்டு விாிவுரையினை நிகழ்த்தினாா். காத்தான்குடியினை தளமாகக்…

Read More

டித்வா புயலினால் சேதமடைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டு திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார் . கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக…

Read More

சிங்கள மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம்…

Read More

ரமலான் வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு.

ரமலான் வினா-விடை வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது (நூருல் ஹுதா உமர்) அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரனையில், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ரமலான் வினா-விடை போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், அமைப்பின் உறுப்பினர்கள் குடும்ப ஒன்று கூடலும் இன்று திங்கள்கிழமை(13) ஒலுவில் அஸ்ரப் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மதப்பண்புகளை வளர்த்தெடுத்தல், இளைஞர்களிடையே இஸ்லாமிய…

Read More

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

பிறைந்துரைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கெளரவிப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட 35 மாணவர்கள், பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (13) மட்/மம சாதுலியா வித்தியாலய முன்றலில் கெளரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பிரதேச மாணவர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியம், இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை…

Read More
Back To Top