தேசியத்தில் சாதனை படைத்த மட்டு.ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி.

அகில இலங்கை அஹதியா சம்மேளனம் நாடளாவிய ரீதியில் நடத்திய “அஹதியா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை 2025/2026” இல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி எஸ்.பாத்திமா ஹப்னா முதல் 10 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச்சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வியத்தகு இச்சாதனையை நிலைநாட்டிய இம்மாணவிக்கு ஓட்டமாவடி அஹதியா பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபர் எம்.எம்.பைஷல் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மார்க்கக்கல்வியில் இம்மாணவி காட்டிய அதீத ஆர்வமும், கடின உழைப்பும் இன்று எமது பிரதேசத்திற்கு பாடசாலைக்கும் கௌரவத்தைத் தேடித்தந்துள்ளது.

ஹப்னா அவர்களின் கல்விப்பயணம் மென்மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்குப் பயனுள்ள சிறந்த ஆளுமையாகத்திகழப் பிரார்த்திப்பதுடன், இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் அதிபர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top