

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பிரிவிற்குட்பட்ட அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று ஆசிரியை எஸ.எம.மர்ழியா அவர்களின் ஒழுங்கமைப்பில் தரம் ஒன்று மாணவர்களின் சுற்றாடல் பாடத்தில் எமது மரபுரிமை (சுதேச ஆடை -எமது நாட்டு மக்களின் தேசிய ஆடை) தொடர்பான செயற்பாடு நேற்று (14.05.2026) சிறப்பாக இடம்பெற்றது.
இதில் எமது நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் ஆடைக்கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் ஆடையமைப்பு வடிவடைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
