

சாவகச்சேரியில் புதிய பொலிஸ்
உத்தியோகத்தர் விடுதி திறந்து வைப்பு.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்புவிழா வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,பொலிஸ்மா அதிபர்,வடமாகாண பிரதிப் பொஸிஸ்மா அதிபர்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர்,பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
