கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களினால் அஸீஸா பெளன்டேசன் தலைவர் சாதீக் ஹசன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்று கற்றல் உபகரணங்கள் அடையாளப்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அஸீஸா பெளன்டேசனின் தலைவர் சாதீக் ஹசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். சுபைர் ,
ஏறாவூர் நகரசபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் சுல்தான்ரியாழ்,ஓய்வு நிலை ஆசிரியர் ரபீக் உட்பட பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையில் அஸீஸா பௌன்டேசன் பல்வேறுபட்ட மனிதநேய பணிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கும் தொடராக உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .




