


வறிய மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு.
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிருத்திக்குமான அமைப்பின் (YESDO) ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்காக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (02) காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.ரீ.எம். இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மொரட்டுவை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. என்.எம்.எம். நிஹாஜ், மற்றும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.இஸெட்.ஏ. ஸக்கி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி, இலங்கை முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பி.எம். பைரூஸ், காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் நித்யா , ஊர் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், YESDO அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
காத்தான்குடி மற்றும் அண்மித்த பிரதேசங்களிலுள்ள பல பாடசாலைகளில் இருந்து பார்வை இடர்பாடுடைய 200ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் மூக்குக்கண்ணாடி தேவையுள்ள 80 வறிய மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
