

நேற்று வியாழக்கிழமை இரவு எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
அது தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று (03) வியாழக்கிழமை இரவு சுமார் 11:00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை பகுதியில் விரண்டு வந்த எருமை மாடு ஒன்று அங்கு நின்ற பெண் ஒருவரை குத்தி விட்டு போட்டார் சைக்கிள் ஒன்றையும் சேதப்படுத்திவிட்டு பின்னர் அப்றார் நகர் ஊடாகச் சென்று வீடு ஒன்றினுல் புகுந்து அங்கு இருந்த வயோதிப பெண் ஒருவரையும் குத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் மாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
✍️ எம்.பஹத் ஜுனைட்