மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான AR.பிரௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.