

ஏறாவூர் கிட்ஸ் கல்லூரியின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்.
செய்தியாளர்
உமர் அறபாத் .
ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் கின்டர் கார்டனின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மட்/ அறபா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது .
நிகழ்வின் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.ஜுமானா ஹஸீன் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்பள்ளிகளுக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாறூக் விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ உறுப்பினர் எம்.ஆர்.நஸீர்,ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் நிருவாக பொறுப்பதிகாரி எஸ்.எல்.சறூக்,ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர் யூ.எல்.மஜீத்,அல் அமான் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.அமீர்,
முன்பள்ளிகளுக்கான இணைப்பாளர் சக்கீனா பௌசுல் உட்பட மாணவச் செல்வங்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என பலர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் .
ஒரு தசாப்தத்தை கடந்து பயணிக்கும் ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் பாடசாலையானது ஏறாவூர் மண்ணில் அதிகூடிய மாணவர்களை உள்ளடக்கிய முன்பள்ளியாக திகழ்கிறது.
மேற்படி நிகழ்வில் மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் யாவும் அதிதிகளின் வரவேற்பினையும் பாராட்டினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
