ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்திற்கு முதலாவது பெண் அதிபர்.
(உமர் அறபாத் -ஏறாவூர்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி.ஜெஸீலா முகம்மது ஹாரிஸ் இன்று புதன்கிழமை(24/09)
உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபராகவும் திகழ்கின்றார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையிலே இவ் அதிபர் நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,
குடும்பத்தினர்,மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .
ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம் பாடசாலைக்கு வருகை தந்து புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்ததுடன் அதிபர் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.


