

ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.
ஏறாவூர் 3A சனசமூக நிலையம் மற்றும் ஏறாவூர் சாரணர்கள் நலன்புரி சங்கத்தின்
ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததானம் நிகழ்வு 11/10/2025 சனிக்கிழமை அன்று ஏறாவூர் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.றூமி தலைமையில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
இதன்போது அதிக உதிரக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உதிரங்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
