


ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக எம்.எல்.அன்ஸார் கடமையேற்றார்
செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக இன்று (01.01.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் பாடசாலையின் கல்வி மற்றும் பெளதீக வளர்ச்சிக்கு பிரதேச மட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
