பார்வையற்றோருக்கான அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அன்சக் அஹமட் .
(SMM.முர்சித்)
பார்வையற்றோர் சுமார் 1/2 மீற்றர் தூரத்திலுள்ள பாதிப்பு தரும் ஒலி எழுப்புவதனூடாக பொருளைக் கண்டறியக்கூடிய Smart Blind Stick என்ற அரிய சாதனமொன்றை ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 9E இல் கல்வி பயிலும் மாணவன் நபவி அன்சக் அஹமட் கண்டுபிடித்துள்ளார்.
இவர் ஓட்டமாவடி-01 ஐச்சேர்ந்த எம்.ஐ.நபவி மற்றும் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பர்சானா தம்பதிகளின் புதல்வராவார்.
