

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அணி கைப்பற்றிக் கொண்டது.
இதன் தொடரில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய உள்ளூராட்சி மன்றங்களைத் தம்வசப்படுத்திக் கொண்டது.
அதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக முஹம்மது பைறூஸ் மற்றும் உதவித்தவிசாளராக ஏ.எச்.நுபைல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் (06), தமிழ்ரசுக்கட்சி (01), சுயேட்சைக்குழு (01) ஐக்கிய மக்கள் சக்தி (01) என ஒன்பது உறுப்பினர்களின் ஆதரவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு உறுப்பினரின் ஆதரவுடன் 08 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தவிசாளர் வேட்பாளராக முஹம்மது பைறூஸ், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.எம்.ஹலால்தீன் ஆகியோரும் போட்டியிட்ட நிலையில், ஒரு மேலதிக ஆசனத்தால் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முஹம்மது பைறூஸ் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.