இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையில் மாபெரும் சிரமதானம்.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப்பணி இன்று 29.07.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 7 மணி முதல் நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புற தலைமையில் “கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், இராணுவ முகாம பொறுப்பதிகாரிகள், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவையினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக சேவை நிறுவனங்களின் தொண்டர்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாசிக்குட கடற்கரை மற்றும் அதனை அண்டிக் காணப்பட்ட கழிவுகள், குப்பைகள் என்பன முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.



