


“ஜனனி” வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது செயலமர்வானது, இன்று புத்தளம் மாவட்டத்தில் மதுரன்குலிய இசுரு ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இச் செயலமர்வில், பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவபப்டுத்திய பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பு விருந்தினராக தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்க அவர்களும், புத்தளம் மாவட்டத்தின் துணை தேர்தல் ஆணையாளர் திரு. லக்ஷித ஜயனத் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இச்செயலமர்வில் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கின் அவர்களும், வடமேற்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு எம். சந்திரசிறி தரங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
