


குருநாகல் மாவட்டத்தின் “ஜனனி” வேலைத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செயலமர்வானது கடந்த 10ம் ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில், குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பொது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் CaFFE (Campaign for Free and Fair Elections) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கீன் அவர்கள் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார். மேலும் PeFFRELL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்களும், IRES அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மஞ்சுல கஜநாயக்க அவர்களும், CaFFE அமைப்பின் கணக்காளர் திரு. மாலக வித்தானகே அவர்களும் கலந்து கொண்டனர். மேலும், CaFFE அமைப்பின் குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். சஜாத் அவர்களும், CaFFE அமைப்பின் தென் மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு. ஜயதிலக அவர்களும் இவ்வேலைத்திட்டதில் கலந்து சிறப்பித்தார். மேலும் மூன்று கட்டங்களை கொண்ட “ஜனனி” வேலைத்திட்டத்தின் இறுதி அமர்வாக அமைந்த இந்த நிகழ்ச்சி, கலந்து கொண்ட அனைத்து பெண் பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதன் மூலம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
