ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் HR Foundation பணிப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் AG. அஸீஸூல் றஹீம் அவர்களின் தலைமையில்
மட்/மம/ பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (31/12/2024) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஏனைய அதிதிகளாக பாடசாலை அதிபர் AB. சாஜஹான், பிரதி அதிபர் SD.ஜௌபர் கான், நாவலடி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சமூக செயற்பாட்டாளர் ஜனாப் அசனார், காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய பிரதி அதிபர் முகைதின் பாவா, பாலை நகர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் AC.அஜ்மீர், ஸம் ஸம் ஆடை உற்பத்தியாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கம் ABM.பளீல் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.



