அகில இலங்கை YMMA அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
.

அகில இலங்கை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் கிரஸ் பௌண்டேசன் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
மட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் YMMA ஏறாவூர் கிளையின் தலைவர் எம்.எப்.எம்.பாறூக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11/01)இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுத்தின் ,
ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் TM.உமர் அறபாத் ,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் SKK.சிக்கந்தர் உட்பட அகில இலங்கை YMMA பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ,பிரதேச தலைவர்கள்,செயலாளர்கள் ,
நிருவாக உறுப்பினர்கள் ,மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என பலர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் .
