


காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.
(எம்.பஹத் ஜுனைட்)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும்
மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (16) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவருகிறது.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளை தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ஹாறூன் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில் தமிழ்,முஸ்லிம் இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வருகின்றார்கள் .
இந்நிகழ்வில் வைத்தியசாலை குருதி வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திருமதி அலிமா ரஹ்மான், வைத்தியர் ஜே.நித்திய நந்தனா, மற்றும் ஜம் இய்யா உலமாக்கள், குருதி கொடையாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
