காரைதீவு தவிசாளருடன் சந்திப்பு .

காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் – பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை !

மாளிகைக்காடு செய்தியாளர்

மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. பௌசர் தலைமையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனை சந்தித்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மாளிகைக்காடு மையவாடி புனரமைப்பு, மின்விளக்கு பொருத்துதல் மற்றும் திருத்துதல், திண்மக்கழிவு முகாமைத்துவம், சமூக நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது காரைதீவு பிரதேச சபை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும், முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆலோசகர் எம்.ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், முன்னாள் உப தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன், நம்பிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top