

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் “சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் அல் -அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையினால் போதைப்பாவனை மூலம் ஏற்படும் தீங்குகள் மற்றும் கொடிய டெங்கு நோயின் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் வீதி விழிப்புணர்வு பவணி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் SMM.நவாஸ் தலைமையின் கீழ் பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் “சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ” தலைமைத்தவத்தினை விருத்தி செய்தல் சூழல் விழுமியம் தொடர்பான செயலமர்வுகளும் இடம்பெற்றது.
