


கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (08) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்திய அத்தியட்சகர் Dr FP.மதன் மற்றும் அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் மெளலவி MMS.ஹாறூன் ஸஹ்வி ஆகியோரினால் ஆளுனருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr R.முரளீஸ்வரன் உட்பட வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.