

கோறளை மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கூட்டுறவு உதவி ஆணையாளர் தலைமையிலான குழு விஜயம்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையிலான மட்டக்களப்பு உதவி ஆணையாளர் அலுவலக தலைமை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தயானந்தம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.மங்களன், எஸ்.எம்.ஏ.ஹாதி, கணக்காய்வாளர் ஏ.எம்.அஜ்வத் ஆகியோர் நேற்று (22) கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
சங்கத்தினுடைய தலைவர் எம்.எப்.எம் ஜெளபர், இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் மற்றும் சங்க ஊழியர்கள் இணைந்து உதவி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில், புதிதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளராக பதவியேற்ற எம்.ஐ.எம்.உசனாருக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
சங்கத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சோலார் பவர் சிஸ்டத்தினை பார்வையிட்டதுடன், சங்கத்தினுடைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை பற்றி சங்க இயக்குனர் சபையோடு கலந்துரையாடினார்.
மிக விரைவில் சங்கத்தின் எரிபொருள் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள மேற்கூரை மற்றும் தரையிடல் பணிகளுக்கான வேலைத்திட்டங்கள் பற்றிய அறிக்கையினையும் சங்கத்தலைவர் உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.
அது தொடர்பான வேலைத்திட்டங்களை நிவர்த்தி செய்து தருவதாக உதவி ஆணையாளர் உறுதிமொழியும் வழங்கினார்.
அதே போன்று, சங்கத்தினுடைய வளர்ச்சி தொடர்பிலும் இயக்குனர் சபை மற்றும் ஊழியர்கள் பற்றியும் உதவி ஆணையாளர் பாராட்டுகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
இதே வேளை, 2021/2022, 2022/ 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வறிக்கை நிறைவு பெற்றதையடுத்து அதனூடாக கிடைக்கப்பெற்ற இலாபத்திலிருந்து சங்கத்தலைவரினால் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் கூட்டுறவு நிதிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
