

காத்தான்குடியில் இடம்பெற்ற கலெக்டிவ் சினேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வு.
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடியில் இயங்கிவரும் கலெக்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியை மையப்படுத்தி பல்வேறு மட்டங்களில் சேவையாற்றிவரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச, தனியார், தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது விடயங்களில் தன்னார்வத்துடன் செயற்பட்டு வரும் சகோதர சகோதரிகளின் பணிகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் சமூக விடயங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை மையப்படுத்தியதுமான சினேகபூர்வ சந்திப்பும் செவ்வாய்க்கிழமை(05)
தாருல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அஷ்ஷேய்க் இஹ்ஸான் ஏ றஹீம் (ஹாஷிமி) கிறாத் ஓதி ஆரம்பித்து வைத்த நிகழ்வில் காத்தான்குடி அப்ரார் பௌண்டேசன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அபூபக்கர் (நளீமி) விசேட உரை இடம்பெற்றதுடன் கலெக்டிவ் அமைப்பு பற்றிய அறிமுகத்தை செயலாளர் பொறியியலாளர் ரிஷாட் தெளிவுபடுத்தினார்.
இதன்போது எதிர்காலத்தில் சமூக,அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் அனைத்து சமூக ,அரசியல் சார்ந்த நிறுவனங்கள் அமைப்புகள் இணைந்து செயற்படுவதன் முக்கியவத்துவம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடியை பிரநிதித்துவப்படுத்தும் ஊடகம், அரசியல்,சமூக ,சமய,விளையாட்டு,வர்த்தகம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.