ஏறாவூர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டு சந்தை.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அல் – அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டுச் சந்தை புதன்கிழமை பாடசாலையின் அதிபர் VTM.இஸ்ஸத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி அபூல் ஹசன்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் SL.முனாப்தீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் SM.றிம்சாத், மிச்நகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் MH.யஹ்யா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரி விளையாட்டு சந்தையில் ஆர்வத்துடன் அதிகமான மாணவர்கள் கடைகளை அமைத்து இருந்ததுடன் மாணவர்களின் பெற்றோர்கள் அதிகமானோர் மேற்படி சிறுவர் மாதிரி சந்தையில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .