டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ தொடர்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு..
(எம்.பஹத் ஜுனைட்)
ஊடக சட்ட மன்றம்(Medial Law Forum )ஏற்பாடு செய்த ‘ டிஜிடல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ எனும் தலைப்பிலான ஊடக பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை(01) மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
தேர்தல் காலங்களில் செய்தி அறிக்கையிடல்,போலி தகவல்களை இனங்காணல்,நிகழ்நிலைக்காப்புச் சட்டம்,ஊடக சட்டம், ஊடக பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பீ.எம்.பைறூஸ், வீரேகேசரி பிரதி ஆசிரியர் ரொபர்ட் அன்டனி உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



