
ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தின் பதில் அதிபராக கடமையேற்றிருக்கும் ரீ.எல்.எம்.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்து
2018.09.17 அன்று முதல் ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி 2025.07.04ம் திகதி முதல் பதில் அதிபராகக் கடமையேற்றிருக்கும் ரீ.எல்.ஏ.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உறுதுணையாக விளங்கி வருவதுடன், பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பொருளாளராக, ஒழுக்கக்கட்டுப்பாட்டு குழுத்தலைவராக, ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தலைவராகவும் பல பதவிகளை வகித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.
மாணவர்களின் நலன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி, ஒற்றுமை, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களை ஒருங்கிணைத்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை வெற்றிகரமாக நடாத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு பொறுப்புக்களைச் சுமந்து
திறமையாகச் செயற்பட்ட இவர், அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
கல்வி மேம்பாடு, ஒழுங்கமைப்பு மற்றும் மாணவர்களின் நலனில் அக்கரையோடு செயற்பட்டு பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்திட பிரார்த்திக்கின்றோம்.
அது மட்டுமன்றி, எதிர்காலத்தில் சட்டத்தரணியாகவும் திகழவுள்ளமை குறிப்பிடத்தக்கதென ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலய பாடசாலைச்சமூகத்தின் வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.