பாடசாலை அருகே உணவுப் பொருள் விற்பனை எனும் பெயரில் போதை வியாபாரிகள் .

பாடசாலை அருகே ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் போதைப்பொருளும் விற்பனை.!

மாணவர்களிடையே பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட், மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது நெருங்கியவர்கள் இந்த போதைப்பொருள் அபாயத்திற்கு பலியாவதற்கு முன்னர், தமது பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது குறித்து தகவல் வழங்குவது மக்களின் பொறுப்பாகும் என பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top