மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டு. மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் அங்குரார்ப்பணம்.

பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐ மற்றும் கமரா தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.

இதன் போது ஏ.ஐயுடன் கமரா தொழில்நுட்பம் மற்றும் ஊடகம் தொடர்பாக, ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ விரிவுரையினை வழங்கியதுடன் அதன் செயற்பாடுகள் மற்றும் தொழில் விருத்தி தொடர்பாக நாஸ் கெம்பஸின் பகுதி நேர மாணவ விரிவுரையாளர்களான எம்.ஐ. இஸ்ஹாக் மொஹமட் மற்றும் எம்.என்.என். கரீப் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் நாஸ் கெம்பஸ் முகாமையாளர் கே.எம். மஸாஹிம் உள்ளிட்ட கெம்பஸின் தொழில்நுட்ப குழுவினரும் பங்கேற்றனர்.

இதன் போது கலைத்துறையில் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்து வரும் கலைஞர் காத்தான்குடி இம்றான் ஏற்பாட்டுக்குழுவினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இதன் போது அதிகளவிலான ஊடக பெண் ஆர்வளர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top