மட்டு.அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கிளை ரீதியான உத்தியோகத்தர்கள், சிவில் சமுக அமைப்புக்களின் ஒண்றிய பிரதிநிதிகள் போன்றோரால் சேவை நலன் பாராட்டி பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கி நினைவுச்சின்னம் வழங்கியதுடன் அரசாங்க அதிபருடன் கடமையாற்றிய அனுபவ பகிர்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அரச நிதியோ அல்லது அரச சொத்துக்களை வீண்போகாது பாதுகாத்து மக்களுக்கான சேவையினை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் மாவட்டத்திலிருந்து வறுமையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top