மட்டு.களுவன்கேணியில் விபத்து.

மட்டக்களப்பு களுவன்கேணி அதிசொகுசு கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் இருந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணி நோக்கி பயணித்த அதிசொகுசு கார் களுவன்கேணி புகையிரத கடவைக்கு அருகாமையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளாகியதில் காரை செலுத்திய சாரதி உட்பட 15 வயது சிறுமி என இருவர் உயிரிழந்ததுடன் தாயும் படுகாயம் அடைந்து மட்/போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு சின்ன ஊறனியை சேர்ந்த 25 வயதுடைய ஜெயந்திரகுமார் சஞ்சய் மற்றும் மட்டக்களப்பு கருவப்பங்கேணியை சேர்ந்த 15 வயதுடைய கிரத்தீபன் தமஸ்வினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் இவரது கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.

பொலிசாரின் அழைப்பின் பேரில் விபத்து இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டதுடன் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இக்கோர விபத்தில் கார் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top