மட்டு மாவட்ட  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட
கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வர்ண ஐயசுந்தர ஆகிய இருவரும் கலந்து கொண்டு மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை அரச அதிகாரிகளுக்கு முன்வைத்ததுடன், கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது ஆள் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களது வலைகள் வெட்டப்பட்டு மீன்கள் திருடப்படுவதை நிறுத்துவதற்கான யுக்திகளை முன்னெடுப்பது, பாஸ் நடை முறையினை மீள ஆரம்பிப்பது, ஆள் கடல் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், மீன் களவில் ஈடுபடும் மீனவர்களை எனது குழுவினர் உள்ளிட்ட நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு அவர்களை பிடிப்பதற்கு முயற்சிப்போம் என இதன் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மாதிபர் தெரிவித்ததுடன், பாஸ் நடைமுறையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 பிரதேசங்களில் முதற்கட்டமாக பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்குமான ஆலோசனையினை அதிகாரிகளுக்கும் மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top