



ஏறாவூரில் வீதி விபத்துக்களை தடுக்கும் விஷேட வேலைத்திட்டம் .
அண்மைக்காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டம் ஒன்று இன்று திங்கள்கிழமை
மீராகேணி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SA.சமந்த சிறிவர்தன,
இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் லெப்டினன் கேனல் DM.அனஸ் அஹமட்,ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி JSA.ஜெயலத்,மாக்கான் மாக்கார் பாடசாலை அதிபர்.VT.ஜனூன்,
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான TM.உமர் அறபாத் , ஏறாவூர் கிளை ஜமிய்யதுல் உலமா உப தலைவர் றஹீம் மௌலவி, மீராகேணி
ஜும்ஆ பள்ளிவாயல்,மஸ்ஜிதுல் ஹிழ்ரு பள்ளிவாயல் ,ஸகாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் ,
உலமாக்கள்,ஆசிரியர்கள்,
மீராகேணி கிராம அபிவிருத்தி சங்க நிருவாகிகள்,நலன்விரும்பிகள்
போக்குவரத்து பொலிசார் மற்றும் பொதுமக்கள் என பலர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் காட்டும் சாகசங்களால் மற்றவர்கள் பயணிக்க முடியாத ஓர் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே இவ்வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
