


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலைக் கொடியேற்றம்,பாடசாலைக் கீதம் இசைத்தல்,அமுதவிழா கவி இசைத்தல்,மத குருமார் ஆசியுரை ஆகியன நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபவனி பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியியைச் சென்றடைந்து அங்கிருந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை நினைவுகூரல்,அமுதவிழா கேக் வெட்டுதல்,வலயக் கல்விப் பணிப்பாளர்,அதிபர்,முன்னாள் அதிபர் கௌரவிப்பு,க.பொ.த (சாதாரணதரம்) மற்றும் க.பொ.த (உயர்தரத்தில்),தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த, மாணவர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.