போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும், வீதி நாடகமும்.

தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றது.

இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பி பேரணியாகச் சென்றனர்.

அத்தோடு போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், குடும்பப் பிரச்சினைகள்,தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் மாணவர்களால் செய்து காட்டப்பட்டது.இவ் நாடகங்கள் பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வகையில் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.

சம்பூர் பொலிஸார், சேனையூர் மத்திய கல்லூரி,கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியால பாடசாலை நிருவாகத்தினரின் ஒத்துழைப்போடு போதை ஒழிப்பு வார விழிப்புணர்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top