அனைத்து பஸ் வண்டிகளும் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்துச்செல்லும் – தவிசாளர் நடவடிகை
ஓட்டமாவடி பிரதேசத்தை ஊடறுத்துச்செல்லும் அனைத்து குறுந்தூர, தொலைதூர பஸ் வண்டிகளும் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்று பிரயாணத்தை தொடருமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.
ஓட்டமாவடியூடாக பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகள் இப்பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்துச்செல்லாமையினாலும் பாதையில் பயணிகளை ஏற்றி இறக்குவதனாலும் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக்கருத்திற்கொண்டு ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து தொலைதூர, குறுந்தூர இடங்களுக்குச்செல்லும் பயணிகளின் நன்மைகருதி கிழக்கு மாகாண போக்குவரத்து திணைக்களப் பணிப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதுடன், இப்பிரதேசத்தை ஊடறுத்துச்செல்லும் திருகோணமலை, கொழும்பு, கண்டி போன்ற தூர மற்றும் குறுஞ்சேவை பஸ் வண்டிகள் அனைத்தும் பஸ் தரிப்பு நிலையத்தினுள் குறிப்பிட்ட நேரம் தரித்து பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்லுமென தவிசாளர் தெரிவித்தார்.