அனர்த்த முகாமைத்துவ தொடர்பான கூட்டம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .


அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் 24-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் நாட்களில் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏறாவூரில் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான முன் ஆயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்படுமாயின் அது தொடர்பான ஏற்பாட்டு விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினார்கள்.
இக் கலந்துரையாடலில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழீம், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், ஏறாவூர் நகரசபை கௌரவ பிரதி தவிசாளர் ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள்,கிராம உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர் .
